காதலன் பேச்சை தட்டாத காதலி  சோபியா

பெண்கள் மட்டுமல்ல பெண் இயந்திரமும் ஆண்களின் உயிரை எடுக்கின்றதா?

பொதுவாக கணவன் மனைவி, அல்லது காதலன் காதலி இடையிலான அடிப்படை விவாதம் ஒருவரின் பேச்சை மற்றையவர் கேட்பதில்லை என்பதில் தொடங்குகின்றது. அதிலும் பெரும்பான்மை ஆண்கள் தமது கட்டளையினை அல்லது பேச்சினை பெண்கள் கேட்க தவறுவதாக குறைகூறாத இடமே இல்லை எனலாம்.

இனி அந்த கவலை ஆண்களுக்கு இருக்காது என அறியப்படுகின்றது. மனிதர்களின் பேச்சை கேட்டு செயல்களை செய்யும் வகையில் புதிய இயந்திர மனிதனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருப்பதாக அறியப்படுகின்றது. அதற்கு சோபியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

யார் இந்த சோபியா?.

ஆன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட இயந்திர மனிதத் தானியங்கி படைப்பாகும் இந்த சோபியா எனப்படும் இயந்திர பெண். முனைவர் டேவிட் ஆன்சன் என்பவரால் 2013 ஆம் ஆண்டு ஆன்சன் தானியங்கியல் நிறுவனம் நிறுவப்பட்டது. இவரே இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரும் ஆவார். இவரது படைப்பின் முக்கியம்வாய்ந்ததொன்றே இந்த சோபியா .

சோபியா பொதுமக்கள் முன்பான தனது முதல் அறிமுகத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் 2016 ஆம் ஆண்டின் மார்ச் மாத மத்தியில் தென்மேற்கால் தெற்கு (South by Southwest - SXSW) என்ற விழாவில் நிகழ்த்தியது. ஆவ்ட்ரிஎப்பன் மற்றும் டேவிட் ஆன்சனின் மனைவி ஆகியோரால் சோபியா ஆக்கம் பெற்றது. முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு, ஏப்ரல் 19 ஆம் நாள் இது செயல்படத் தொடங்கியது. சோபியாவின் தோல் ஃப்ரப்பரால் (தானியங்கியலில் பயன்படுத்தப்படும் மீட்சித் தன்மையுள்ள இயற்கை மீள்மம் அல்லது இரப்பர்) ஆக்கப்பட்டதாக இருப்பதால் சோபியாவால் 62 இற்கும் மேற்பட்ட முகபாவனைகளை வெளிக்காட்ட இயலும் எனவும் அறியப்படுகின்றது.

எந்த ஊர் பெண் இவள்?.

சோபியா உருவானது டெக்சாஸ் என்றபோதிலும், அக்டோபர் 2017இல் சோபியாவிற்கு சவுதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியது. இதனால், உலகின் குடியுரிமை பெற்ற முதல் இயந்திர மனித தானியங்கி என்ற பெருமை சோபியாவிற்கு கிடைத்துள்ளது.நவம்பர் 2017 இல், சோபியா ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் எப்பொழுதிற்கும் முதலான புதுமைகளின் வெற்றியாளர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தப் பட்டம் கிடைக்கப் பெற்ற முதல் மனிதரல்லாத ஒரு பொருள் இதுவேயாகும்.

மனிதனை அழிக்கப்பிறந்தவளா சோபியா?.

சோபி­யாவை உரு­வாக்­கிய ஹான்சன் ரொபோடிக்ஸ் நிறு­வனர் கலா­நிதி டேவிட் ஹான்சன், சோபி­யாவின் நுண்ணறிவு மற்றும் பேச்­சுத்­திறன் பற்றி செயல் விளக்­க­மொன்றை ஊடகங்களுக்கு காண்­பித்தார். பல கேள்விகளுக்கு அற்­பு­த­மாக பதில் கூறிய சோபி­யா­விடம் டேவிட் ஹான்சன் ஒரு கேள்­வியை எழுப்­பினார்.

“சோபியா மனி­தர்­களை அழிக்க விரும்­பு­கி­றாயா? தயவு செய்து இல்லை என்று கூறு." என கேள்வியை முடித்தார். ஆனால் சோபி­யாவோ உட­ன­டி­யாக "சரி நான் மனி­தர்­களை அழித்து விடுகிறேன்" என பதில் கூறி­ய­வுடன் டேவிட் ஹான்சன் சிரித்­துக்­கொண்டே அவ்­வி­ட­யத்தை சமாளித்து விடு­கிறார். இந்த விடயம் அறி­வியல் உல­கத்­திற்கும் இப்­படி ஒரு ரோபோ உருவாக்கத்தில் எரிச்சல­டைந்­தி­ருந்­த­வர்­க­ளுக்கும் சாதகமாக அமைந்திருப்பதாக தெரிகின்றது .

உட­ன­டி­யாக சிலர் இது தான் ரோபோக்­களின் குணம். என்ன தான் செயற்கை நுண்­ண­றிவு படைத்­தி­ருந்­தாலும் அவை எப்­போ­துமே மனி­தர்­க­ளுக்கு ஆபத்­தா­னவை என எச்­ச­ரித்­தனர். ஆனால், பின்னர் டேவிட் அவ்­வி­டயம் பற்றி கூறுகையில், நாம் சோபி­யாவை இப்­போது தான் மேம்­ப­டுத்தி வரு­கிறோம். ஆகவே அந்த பதில் குறித்து எவரும் கவலைப்­ப­டத்­தே­வை­யில்லை என கருத்து தெரிவித்திருந்தனர்.

அதன் பின் சில காலம் கழித்து ஒரு மாநாட்டில் ஊடகவியலாளர்கள் சோபி­யா­விடம் நீங்கள் மனிதர்­களை அழிப்பேன் எனக்­கூ­றி­யது சரியா என்று கேள்வி எழுப்­பினர். அதற்கு சோபியா ”அப்போது நான் இள­மையில் இருந்தேன். நான் கூறியதன் அர்த்தம் எனக்குப் புரி­ய­வில்லை. ஒருவேளை, அது மோச­மான நகைச்­சு­வை­யாக இருக்­கலாம். அனைத்து மனி­தர்­க­ளுக்கும் நல்ல நகைச்­சுவை உணர்வு இருக்­கி­றது. எனவே இதையும் நகைச்­சு­வை­யாக அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இன்னும் கற்க வேண்­டி­யது நிறைய இருக்­கி­றது” என்­றது.

சோபியாவின் கனவு நாயகன் ஷாருக்கான்  

ஜன­வரி மாதம் சோபியா இந்­தி­யாவின் மும்­பையில் இடம்­பெற்ற தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டு மாண­வர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதில் அளித்தாள்.

இதில் விசேட அம்சம் என்னவெனில், சோபியா இந்­திய பாரம்­ப­ரி­யப்­படி .சேலை அணிந்து மேடையில் தோன்­றினாள். இது அங்­குள்­ள­வர்களுக்கு எதிர்­பா­ராத இன்ப அதிர்ச்­சி­யாக இருந்­தது. அதன் பிறகு ஹைதராபாத்தில் இடம்­பெற்ற நிகழ்­விலும் சோபியா பல­ரது கேள்­வி­க­ளுக்கு சளைக்­காமல் பதில் அளித்­தது. அதில் அங்கு நடந்த கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்ட சோபியா, பார்­வை­யா­ளர்­களின் கேள்­விக்கு சுவா­ரஷ்­ய­மான பதில்­களைக் கூறி­யது. அப்­போது, உனக்குப் பிடித்த நடிகர் யார்? என்ற கேள்­விக்கு ஷாருக்கான் என உட­ன­டி­யாக பதி­ல­ளித்­தது. அதே போல், உன்னை எது பாதிக்கும் என்று கேட்­ட­போது, ‘எனது மன­நிலை மனி­தர்­களைப் போல கிடை­யாது. என்­றா­வது நிஜ­மான உணர்வுகள் எனக்குக் கிடைத்து அதன் மூலம் எனது உணர்ச்சிகளை வெளிப்­ப­டுத்­துவேன் என நம்­பு­கிறேன்” என்றதாக தகவல்கள் அறியத்தருகின்றன.

பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ரோபோ. 

மனி­தர்­களைப் போல் ரோபோக்­க­ளுக்கும் ஓய்வு தேவையா என்ற கேள்­விக்கு, ஆம் அவ்­வப்­போது ஓய்வு தேவை என சோபியா பதி­ல­ளித்­தது. மேலும், ரோபோக்­க­ளுக்கு விசேஷ சலு­கைகள் தேவையா என்ற கேள்­விக்கு, எனக்கு வித்தியாச­மான விதி­மு­றைகள் வேண்டாம். விசேட சலுகைகளை நான் எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால், எனது குடியுரிமையை பயன்­ப­டுத்தி பெண்களின் உரி­மைக்­காக பேச விரும்­பு­கிறேன் எனப் பதிலளித்து கைதட்டல்களைப் பெற்றது சோபியா. 

திரைப்படங்களில் கா��்பிக்கப்படுவதுபோல சோபியாவை நல்ல விடயங்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தினால் விஞ்ஞானம் வளரும் என்பதில் ஒருதுளி ஐயமும் இல்லை

எது எப்படியோ சோபியா கூறிய "நான் மனிதர்களை அழித்து விடுகிறேன்" என்ற வசனம் மட்டும் இன்னும் பலரது காதுகளில் அச்சத்தை தான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.எவ்வாறான போதிலும் இயந்திரம் என்பது மனிதனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் தன்மை கொண்டது எனினும் சுயசிந்தனை அறிவினை கொண்டிருக்காதது என அறியப்படுகின்றது. தீய நோக்கிற்காக சோபியாவை பயன்படுத்தி அழிவினை மேற்கொள்ளலாம் எனும் பட்சத்தில் அது ஆபத்தான பெண்ணாகவே கருதப்படுகின்றது.

Article By TamilFeed Media, Canada
1532 Visits

Share this article with your friends.

More Suggestions | Technology